மேலும் செய்திகள்
குபேரா - டிரைலர்
16-Jun-2025
கோவையின் பிரபல தொழில் அதிபரும், சுற்றுச்சூழலின் மீது பற்று கொண்டவருமான சிறுதுளி அமைப்பின் நிர்வாக அறங்காவலர் வனிதாமோகன், ஆப்பிள் ஐ போன் 14 ப்ரோ பயன்படுத்தி வருகிறார்.''தகவல் தொடர்புக்கானது மொபைல். ஆடம்பரத்துக்கு அல்ல. அதனால் புதிய மொபைல்கள் மீதெல்லாம், நாட்டம் இல்லை. நான்கு ஆண்டுகளாக ஒரே போன்தான் பயன்படுத்தி வருகிறேன். தொடர்ந்து மாற்றிக்கொண்டே இருந்தால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. இளம் தலைமுறையினருக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். தேவைக்கு ஏற்ப ஒருமுறை தேர்வு செய்து விட்டு, பின் மாற்றுவது கூடாது,'' என்கிறார் இவர். 512 ஜி.பி.ஸ்டோரேஜ் வசதி கொண்ட இந்த ஆப்பிள் ஐ போன் 14 ப்ரோ விலை 1.60 லட்சம் ரூபாய்.
16-Jun-2025