கூகுள் ஸ்டோரேஜ் நிரம்பி விட்டதா..இனி ஈஸியா நீக்கலாம்..!
கூகுள், குரோம், யூடியூப் அல்லது கூகுளுக்கு சொந்தமான எந்தவொரு சேவையை பயன்படுத்த ஜிமெயில் கணக்கு என்பது கட்டாயம். உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் ஜிமெயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இணையத்தில் பெரும்பாலான செயலி அல்லது சேவைகளை கணினி அல்லது ஸ்மார்ட்போன் வாயிலாக பயன்படுத்தும் போது, கூகுள் கணக்கு வாயிலாகவே உள்நுழைய முடியும். குறிப்பிட்ட ஆண்டுகளில் தேவையற்ற இ - மெயில்களால், கூகுள் இலவசமாக தரும் 15 ஜி.பி., ஜிமெயில் ஸ்டோரேஜ் நிரம்பி விடுகிறது. மேலும் இதுகுறித்து அறியாத சிலர், தங்களது போட்டோக்கள், தொடர்பு எண்கள், பி.டி.எப் போன்றவற்றை கூகுள் நினைவகத்தில் சேமித்து வைப்பர். கூகுள் ஸ்டோரேஜ் நிரம்பிவிட்டால், நீங்கள் மாதந்தோறும் கட்டணம் செலுத்த வேண்டும். அல்லது தேவையற்ற உள்ளடக்கத்தை அழித்து இடத்தை ஏற்படுத்த வேண்டும்.