உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / அறிந்துகொள்வோம் / அமைதியான நாடுகள் : இந்தியாவின் ரேங்க் அறிவோமா?

அமைதியான நாடுகள் : இந்தியாவின் ரேங்க் அறிவோமா?

உலகிலேயே மிகவும் அமைதியான நாடுகள் பட்டியலில், நடப்பாண்டு ஐஸ்லாந்து முதலிடத்தை தக்கவைத்துள்ளது. ஒரு நாட்டுக்கு பயணம் மேற்கொள்ளும் போது, பாதுகாப்பை உறுதி செய்வது அவசியம். சர்வதேச சிந்தனை குழுவான பொருளாதாரம் மற்றும் அமைதி நிறுவனம், உலகளாவிய அமைதி குறியீட்டு பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. 2023ம் ஆண்டுக்கான அமைதியான நாடுகள் பட்டியலை வெளியிட்டுள்ளது. வன்முறை, குற்றம், பயங்கரவாதம் மற்றும் சர்வதேச மோதல்கள் போன்ற அம்சங்கள் அடிப்படையில் தரவரிசை தயார் செய்யப்படுகிறது. இந்த பட்டியலில், கடந்தாண்டு 135வது இடம் பிடித்திருந்த இந்தியா, இந்தாண்டு 9 இடங்கள் முன்னேறி 126வது இடத்தை பிடித்துள்ளது. கடந்தாண்டை விட 3.5 சதவீதம் அமைதி அதிகரித்துள்ளது.

131வது இடத்தை அமெரிக்கா பெற்றுள்ளது. அதிகம் வன்முறைகள் நடக்கும் சீனா, சவூதி அரேபியா, எல்சால்வடார் மற்றும் ஹோண்டுராஸ் போன்ற நாடுகள், அமெரிக்காவை விட அமைதியானவை என குறிப்பிடப்பட்டுள்ளது. பிரிட்டன் 37வது இடத்திலும், ஆஸ்திரேலியா 22வது இடத்திலும் உள்ளன.டாப் 10 நாடுகள் எவை ?1. ஐஸ்லாந்து2. டென்மார்க்3. அயர்லாந்து4. நியூசிலாந்து5. ஆஸ்திரியா6. சிங்கப்பூர்7. போர்ச்சுக்கல்8. ஸ்லோவேனியா9. ஜப்பான்10. சுவிட்சர்லாந்துபின்லாந்துக்கு சிறப்பிடம் :அமைதிக்கான மூன்று முக்கிய அம்சங்களில் ஒன்றான பாதுகாப்பை பொறுத்தவரை, உலகின் பாதுகாப்பான நாடாக பின்லாந்து உருவெடுத்துள்ளது.பாதுகாப்பை மதிப்பிடுவதற்கு, கொலைகளின் எண்ணிக்கை மற்றும் சிறைவாசிகளின் எண்ணிக்கை போன்ற புள்ளிவிவரங்களை கணக்கில் எடுத்து கொள்ளப்படும். அந்த வகையில், பின்லாந்து உலகளவில் பாதுகாப்பான நாடாக சிறப்பிடம் கிடைத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி