இன்வெர்ட்டர் ஏசி என்றால் என்ன? மின்சார பில்லை குறைக்குமா அது!
வெயில் தற்போதே சுட்டெரிக்க தொடங்கிவிட்டது. வானிலை ஆய்வு மையமும் பனிக்காலம் முடிந்துவிட்டது, படிப்படியாக இனி வெயில் தலை தூக்கும் என அறிவித்துள்ளது. பலரும் ஏசி வாங்க படையெடுப்பார்கள். தற்போது மார்க்கெட்டில் இன்வெர்ட்டர் ஏசி தான் அதிகம் தென்படுகிறது. இன்வெர்ட்டர் ஏசி என்றால்? மின்வெட்டு சமயத்தில் இன்வெர்ட்டரில் இயங்கக் கூடியதா போன்ற சந்தேகம் எழும். அதற்கான விளக்கத்தைப் பார்க்கலாம்.ஏசியின் இதயம்
ஏசி சில்லென்று காற்றை வழங்க முக்கிய காரணமாக விளங்குகிறது கம்ப்ரசர். இதனை ஏசியின் இதயப் பகுதி என்பர். இந்த கம்ப்ரசரின் மேல் பகுதியில் மோட்டார் இருக்கும். கீழ் பகுதியின் கம்ப்ரசிங் ரோட்டார் இணைக்கப்பட்டிருக்கும். மோட்டார் சுற்றும் போது ரோட்டார் இயங்கி காற்றை கம்ப்ரஸ் செய்து கூலிங்காக அறைக்கு அனுப்பும்.பழைய ஏசி மாடல்
பழைய மாடல் ஏசிக்களில் இந்த கம்ப்ரசர் மோட்டார், ஏசி மோட்டாராக இருக்கும். இந்த மோட்டார் நாம் செட் செய்த அறை வெப்பநிலையை அடையும் வரை முழு திறனில் இயங்கும். உதாரணத்திற்கு 24 டிகிரி செல்சியஸ் என செட் செய்தால். அது வரை முழு திறனில் இயங்கும் மோட்டார். அதன் பின் நின்றுவிடும். பின்னர் வெப்பநிலை 25 என கூடினால், மீண்டும் இயங்கும். இந்த மோட்டார்களில் இன்ரஷ் கரண்ட் அதிகம். அதாவது துவக்க மின்சாரம். ஒவ்வொரு முறை நின்று மீண்டும் இயங்க துவங்கும் போது டார்க் அதிக தேவைப்படும். இதனால் அதிக ஆம்ஸ் மின்சாரத்தை எடுக்கும். நிலையான வெப்பநிலை
இங்கு தான் இன்வெர்ட்டர் தேவை
மோட்டார் வேகத்தை கூட்டி குறைக்க வி.எப்.டி., தேவை என பார்த்தோம் இல்லையா. வி.எப்.டி.,க்கு இன்வெர்ட்டர் சாதனம் தேவைப்படுகிறது. புதிய குளிர்சாதனங்களின் கம்ப்ரசர்களில் டிசி மோட்டார் உள்ளது. ஈபியிலிருந்து ஏசி கரண்ட் வருகிறது. இதனை கன்வர்ட்டர் டிசியாக்கும். மின்சாரத்தின் அதிர்வெண்னை மாற்றினால் தான் மோட்டார் வேகத்தை கூட்டுவதோ, குறைப்பதோ சாத்தியம். இந்த இடத்தில் இன்வெர்ட்டர் அப்பணியைச் செய்கிறது. இது குளிர்சாதனத்தில் இருக்கும் சிறிய சாதனம். இந்த இன்வெர்ட்டரில் ஸ்விட்சுகள் இருக்கும். மின் சப்ளை மூலம் அவை சுழற்சி முறையில் ஆன் ஆப் ஆகி கம்ப்ரசர் மோட்டாரை சுற்ற வைக்கும். நாம் தரும் அதிர்வெண்னிற்கு ஏற்ப இவற்றின் வேகமானது மாறுபடும். இந்த இன்வெர்ட்டர் ஸ்விட்சுகள் ஐ.ஜி.பி.டி., எனும் டிரான்சிஸ்டார் ஸ்விட்சுகள். இதன் விலை அதிகம். இன்வெர்ட்டர் ஸ்விட்சுகள் ஆன் ஆப் ஆவதில் சிறிய கோளாறு ஏற்பட்டால் இந்த ஐ.ஜி.பி.டி., ஸ்விட்சுகள் வெடித்துவிடும். இதனால் தான் ஏசி மெக்கானிக்குகள் சாதாரண ஏசி வாங்க பரிந்துரைப்பர். ஆனால் மார்க்கெட்டில் இப்போது சாதாரண ஏசி என்பது அரிதாகிவிட்டது. நல்ல முறையில், தரமான ஒயரிங் செய்யப்பட்ட வீடுகள். பறவைகள், அணில்கள் அண்ட முடியாத இடத்தில் அவுட்டோர் யூனிட்கள் வைக்க முடியும் எனில் இன்வெர்ட்டர் ஏசி பிரச்னையின்றி செலவு வைக்காமல் இயங்கும்.மின்சாரம் மிச்சமாகுமா?
என்ஜினியரிங் பேக்ட்ஸ் யுடியூப் சேனலில் மின் சாதனப் பொருட்கள் குறித்து பயனுள்ள வீடியோக்களை வெளியிடும் சையது இம்ரான் இருவகை ஏசிக்களையும் 28 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் 12 மணி நேரம் ஓடவிட்டு, மின்சாரத்தை கணக்கெடுத்தார். இரு வகை ஏசிக்களும் கிட்டத்தட்ட 7 யூனிட் மின்சாரத்தையே எடுத்துள்ளன. அதன்படி பார்த்தால் இன்வெர்ட்டர் ஏசி எந்த வகையிலும் மின்சார பில்லை குறைக்காது.