மணவாழ்க்கை ஒரு மாட்டு வண்டி | ஆன்மிகம் | Spirituality | Aanmeegam
அந்தக் காலத்தில் திருமண மேடைகளில் எல்லா மங்கலப்பொருட்களுடனும் வண்டிகளில் மாடுகளைப் பூட்டும் நுகத்தடி ஒன்றையும் வைத்து விடுவார்கள். இரண்டு மாடுகளும் ஒரே உயரத்தில் சமமாக நுகத்தடிக்குள் கழுத்தைக் கொடுத்து சம வேகத்தில் இழுத்துச் செல்லும். இப்படிச் சென்றால் தான் வண்டியில் செல்பவர்கள் சுகமான பயணத்தை அனுபவிப்பர். மண வாழ்க்கையும் இப்படித்தான். புதுமணத்தம்பதிகளான நீங்களும் இந்த மாடுகளைப் போல் சமமான வேகத்தில் செல்லுங்கள். ஒரு மாட்டுக்கு கழுத்து வலித்து சற்றே நின்றாலும் அதன் வேலையையும் சேர்த்து இன்னொரு மாடு பார்த்துக் கொள்ளும்.
நவ 29, 2024