/ தினமலர் டிவி
/ ஆன்மிகம்
/ பணமிழப்பு செய்யப்பட்ட ₹ 2000 நோட்டுகளும் காணிக்கை | Tiruchendur Subramanyar Temple ₹5.82 crore
பணமிழப்பு செய்யப்பட்ட ₹ 2000 நோட்டுகளும் காணிக்கை | Tiruchendur Subramanyar Temple ₹5.82 crore
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை மாதத்துக்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி கோயில் வசந்த மண்டபத்தில் அறங்காவலர் குழுத்தலைவர் அருள்முருகன் தலைமையில், இணை கமிஷனர் ஞானசேகர் முன்னிலையில் எண்ணப்பட்டது. அதில் 5 கோடியே 82 லட்சத்து 68 ஆயிரத்து 146 ரூபாயும், 3.7 கிலோ தங்கம், 49 கிலோ வெள்ளி, 1535 வெளிநாட்டு கரன்சிகளும் காணிக்கையாக கிடைத்தது. 2000 ரூபாய் நோட்டுகள் 17 ம் இருந்தன. யானை பராமரிப்புக்கான உண்டியலில் 2.34 லட்சமும், கோசாலை பராமரிப்புக்கான உண்டியலில் 1.21 லட்சமும் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆக 09, 2024