இறைவனுக்கு மட்டும் எட்டு சின்னங்கள் | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar
இறைவனுக்கு மட்டும் எட்டு சின்னங்கள் | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar சிவனையும், பெருமாளையும் வணங்குபவர்கள் எட்டு சின்னங்களை வைத்துள்ளனர். 1. ஓம் என்னும் பிரணவ மந்திரம்- இது இரண்டு தெய்வங்களுக்குமான பொது மந்திரம். ஓம் நமச்சிவாய, ஓம் நாராயணாய நமஹ என்று சொல்வது வழக்கம். 2. பிள்ளையார் சுழி- எதைத் தொடங்கினாலும், உ என்ற பிள்ளையார் சுழியிட்டு துவங்கினால், அது தங்குதடையின்றி நடக்கும். 3. துளசிமாடம்- இதை சுற்றி வந்து வணங்கினால், கன்னிப்பெண்களுக்கு நல்ல கணவன் அமைவார். திருமணமான பெண்களுக்கு சுமங்கலி பாக்கியம் கிடைக்கும். 4. ருத்ராட்சம்- இதை மாலையாக்கி அணிந்தால், மனநிம்மதி, பக்திப்பெருக்கு, பார்ப்பவர்கள் கண்களில் மரியாதை, நோயின்மை ஆகிய பல பலன்கள் கிடைக்கும். 5. வில்வமரம்- இது நோய் தீர்க்கும் மரம். ஆக்சிஜனை அதிகம் வெளியிடும், நோய்கள் நீங்கும். பல சிவன் கோவில்களில் தலமரம் இது தான். இதன் கீழ் நின்றாலே புண்ணியம் தான். நோயற்ற வாழ்க்கை குறைவற்ற செல்வம் இல்லையா? 6. சங்கு- இதை வீடுகளில் பூஜையறையில் வைத்தால், வீட்டில் செல்வச்செழிப்பு ஏற்படும். கோவில்களில் இதன் புனித ஒலியைக் கேட்டால், மனம்