உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / ஆன்மிகம் / நாளை மகாபிரதோஷம் | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar

நாளை மகாபிரதோஷம் | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar

நாளை மகாபிரதோஷம் | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar நாளை சனி பிரதோஷம் என்னும் மகாபிரதோஷ நன்னாள். சிவாலயங்களில் உள்ள நந்தீஸ்வரருக்கு சிறப்பு பூஜை நடக்கும். சனிப்பிரதோஷத்தன்று, ஒருவர் கூட விடாமல், எல்லா தேவர்களும், சிவன் நந்தியின் கொம்புகளுக்கு இடையில் நின்று திருநடனமிடுவதைக் காண வந்து விடுவார்கள். எனவே, இந்நாளில் சிவனை மட்டுமல்ல, எல்லாரையும் வணங்கிய புண்ணியம் கிடைக்கும் என்பதால் தான், பக்தர்கள் கூட்டம் இந்நாளில் அலை மோதும். சனிப்பிரதோஷத்தின் முக்கிய நோக்கம் முக்தி பெறுவது. முக்தி என்றால் பிறப்பற்ற நிலை. இறைவனுடன் ஆத்மா கலந்து விட்டால், அதன்பின் எது பற்றியும் கவலையில்லை. என்றுமே மகிழ்ச்சி தான். அது மட்டுமல்ல, பூமியில் வாழும் நாளிலும் சகிப்புத்தன்மை, பொறுமை முதலான நற்குணங்களைப் பெற்று, குடும்பம் ஒற்றுமையாகவும், எல்லா வளமும், நலமும் பெற்றும் வாழும் என்பதும் நிஜம். நாளைய சனிப்பிரதோஷத்தை தவற விடாதீர்கள். மாலை 4.30-6.00 மணிக்குள் எல்லா சிவன் கோவில்களிலும் பூஜை நடக்கும். பெருமாள் பக்தர்களும், பிரதோஷ வேளையில் நரசிம்மரை வழிபடுவர்.

ஆக 30, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ