திட்டாதீர்கள்...கெஞ்சுங்கள் | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar
திட்டாதீர்கள்...கெஞ்சுங்கள் | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar புற்றுநோய், இருதய நோய், விசித்திரமான காய்ச்சல்கள் என இன்று பலவகை வியாதிகள் உலகை ஆட்டிப் படைக்கின்றன. நோய் வந்தவுடன் நாம் முதலில் திட்டுவது கடவுளைத்தான். தினமும் விளக்குப் போட்ட எனக்கு நீ தந்த பரிசு இதுதானா என்று உரிமையுடன் திட்டித் தீர்த்து விடுவோம். நோய் என்பது அவரவர் வினைப்பயன். காலில் கல் தட்டி ரத்தம் வந்தால் கூட, அது கூட பாவத்தின் பலன் தான். ஆதிசங்கரருக்கு மூலநோய், ரமணருக்கு புற்றுநோய் இருந்தது. மகான்களான இவர்களுக்கே இந்தக்கதி என்றால், சாதாரண மனிதர்களான நாம் எம்மாத்திரம்? யாராக இருந்தாலும் அவரவர் வினைப்பயனை அனுபவிக்கும் போது நோய் வந்தே தீரும். இதனால் தான் பிறவியே ஒரு நோய் என்று, அது வேண்டாம் என மகான்கள் கடவுளிடம் முறையிட்டனர். எனவே வியாதி வந்தால் கடவுளைத் திட்டாமல், அது விரைவில் குணமாக அருள்புரிய வேண்டும் என்றே கடவுளிடம் கெஞ்ச வேண்டும். ....