பகீரதனுக்கு கோவில் | ஆன்மிகம் | Spirituality | Dinamalar
பகீரதனுக்கு கோவில் | ஆன்மிகம் | Spirituality | Dinamalar சூரிய குலத்து அரசன் திலீபன் என்பவனின் மகன் பகீரதன். இந்த வம்சத்தில் தான் ராமர் பிறந்தார். ஆக, ராமனின் முன்னோர் என்ற பெருமை, பகீரதனுக்கு உண்டு. சிவனின் ஜடாமுடியில் இருந்த கங்கையை, தன் அறுபதாயிரம் முன்னோர் ஆத்மசாந்தி பெறுவதற்காக பகீரதன் பூமிக்கு கொண்டு வந்தான். இதற்காக அவன் பட்ட சிரமம் கொஞ்ச நஞ்சமல்ல. இதனால் தான் செய்ய முடியாத செயல்களை சாதித்துக் காட்டுவதை, பகீரத பிரயத்தனம் என்பர். இந்த முயற்சியாளருக்கு ஹரித்துவாரில் கோவில் இருக்கிறது. பத்ரிநாத், கேதர்நாத் செல்லும் பக்தர்கள் ஹரித்துவாரை கடக்கும் போது பகீரதனை வழிபடுவர். ஐப்பசி விசுவான இன்று, நாமும் நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து, அவர்களது ஆத்மா சாந்தி பெற பிரார்த்திக்கலாம்.