திருமணத்தை குறிக்கும் ஊர் பெயர் ! பல்வேறு தடைகளை நீக்கும் பரிகார தலம் | Shivatemple
திருமணத்தை குறிக்கும் ஊர் பெயர் ! பல்வேறு தடைகளை நீக்கும் பரிகார தலம் | Shivatemple | Remedy for Marriage | Chennais unexplored temple திருவள்ளூர் மாவட்டத்தில் திருவாலங்காடு அருகே மணவூர் கிராமத்தில் சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட திருநந்தீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. மூலவர் நந்தீஸ்வரர். தாயார் ஆனந்தவல்லி. சோழர் காலத்தில் மணவூர் கிராமம் மணவூர் கோட்டம் என அழைக்கப்பட்டது. இந்த கோயில் 1200 ஆண்டுகள் பழமையானது. குரும்பர்கள் தொண்டை மண்டலத்தை 24 கோட்டங்களாக பிரித்து ஆட்சி செய்து வந்தனர். அவற்றில் 4வது மண்டலமாக மணவூர் இருந்தது. கொசஸ்தலை ஆற்றங்கரையில் அகத்தியரால் பூஜிக்கப்பட்ட இடம் இது. ஈசனும் தயாரும் திருமண கோலத்தில் காட்சி தருவதால் இந்த ஊருக்கு மணவூர் என்ற பெயர் வந்தது. இந்த கோயிலில் நந்தியம்பெருமாள் நீராடி சிவபெருமானை வழிபட்டு சாப விமோசனம் பெற்றார். இது அக்னி தீர்த்தம் என அழைக்கப்படுகிறது. ஸ்தல விருட்சம் வில்வம். இந்த கோயிலில் கண்ணப்பநாயனார் வழிபட்டதற்கு ஆதரமாக, உற்சவ மூர்த்திகளில் வில்லேந்திய கண்ணப்ப நாயனார் உருவம் அமைந்துள்ளது. கோயில் சுவரில் சோழ மன்னன் மூன்றாம் ராஜராஜனின் கல்வெட்டில் “மணவில் உடையார் சோமநாத தேவர்” என இறைவன் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள விநாயகரை வழிபட்டால் வயிறு கோளாறுகள் நீங்குவதாகவும், அம்பிகை ஆனந்தவல்லியை வழிபட்டால் கடன் தொல்லையிலிருந்து மீள்வதாகவும் பக்தர்கள் நம்புகின்றனர். வியாழக்கிழமைகளில் நெய் தீபம் ஏற்றி விழிபட்டால் திருமண தடைகள் நீங்கும். மார்கழி திருவிழா மற்றும் 11 நாள் வைகாசி விசாகம் உற்சவம் இங்கு கொண்டாடப்படுகிறது.