உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / ஆன்மிகம் / கண்ணனுக்கு இன்று ஹேப்பி பர்த்டே | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar

கண்ணனுக்கு இன்று ஹேப்பி பர்த்டே | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar

இன்று கிருஷ்ண ஜெயந்தி. சாதாரண மனிதர்கள் பிறந்தால், பிறந்த நாள் என்போம். தெய்வப்பிறவிகள் பூமிக்கு வந்தால் அவர்கள் அவதாரம் எடுக்கும் நாளை ஜெயந்தி என்போம். ஜெயந்தி என்ற சொல்லுக்கு படைப்பு என பொருள். கடவுள் உயிர்களை பூமிக்கு அனுப்பினால் அதற்குப் பெயர் பிறப்பு. ஆனால் தன்னைத்தானே பூமியில் பிறக்கச் செய்வதற்கு பெயர் படைப்பு. இது மட்டுமல்ல. இந்தச் சொல்லுக்கு ஆவல், புதுமை, செயல், கவனம், மகிழ்ச்சி, நட்பு, தகுதி, தாராளம், அதிர்ஷ்டம் என்ற பொருள்களும் உண்டு. இந்த பொருட்கள் அனைத்துமே கிருஷ்ணாவதாரத்துக்கு பொருந்தும். கிருஷ்ணர், எங்கிருந்தாலும் அங்கு மகிழ்ச்சி இருக்கும். பசுக்களை மேய்த்தால் பசுக்களுக்கு மகிழ்ச்சி, நண்பர்களுடன் இருந்தால் அவர்களுக்கு ஆனந்தம், பெற்றவள், வளர்த்தவள் என எல்லாருக்கும் அவர் கொடுத்த சந்தோஷம் அளவில்லாதது. இப்படி எல்லாரையும் மகிழ்ச்சிப்படுத்தியவர் என்பதால், கிருஷ்ணரின் பிறந்த நாளை ஜெயந்தி என்கிறோம். கிருஷ்ண ஜெயந்தி நன்னாளில், குழந்தைகளுக்கு கிருஷ்ணர் வேடமிட்டு, அவர்களையும் ஆன்மிகப்பாதையில் அடியெடுத்து வைக்க உதவுவோம்.

ஆக 26, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை