4 தலைமுறை உறவுகள் ஒரு குடையின் கீழ் வசிக்கும் அதிசயம் | கண்டேன் கடவுளை | Epi10 | DinamalarAnmeegam
திருமதி சாந்தி சுரேஷ் ஒரு கர்நாடக இசைப் பாடகி, இசையமைப்பாளர், சமூக ஆர்வலர்.இவர் சென்னை குயின் மேரிஸ் கல்லூரியில் இசை பயின்றார் பல மேடை நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளார். பக்தி ஆல்பங்கள் தயாரித்துள்ளார். விருதுகளை குவித்துள்ளார். சென்னையில் பிரபல அருண் எக்செல்லோ ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவரான திரு. சுரேஷ் அவர்களின் மனைவி தான் சாந்தி. இசை, ஆன்மிகம், குடும்பம், தொழில் என எல்லாம் பகவான் தந்தது… நம் கடமைகளை சரியாக செய்தால் எப்போதும் வாழ்வில் சரிவு என்பதையே பார்க்க முடியாது என்று சொல்லும் சாந்தியின் வீடு முதியோர்களின் கூடாரமா? தலைமுறை உறவுகளையும் பேணிக் காக்கும் பவித்திரமான கோயிலா? என்பது புரியாத அளவுக்கு அன்பையும், சேவை உள்ளத்தையும் தன்னுள் நிரப்பியவர் சாந்தி. கண்டேன் கடவுளை என்ற நம் தொடரில் அவருடைய அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். காணத் தவறாதீர்கள்!