சென்னைக்கு அருகே இப்படியொரு பெருமாள் கோயிலா ! - வரதராஜ பெருமாள் கோயில் Vlog | Varatharajaperumal
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் உள்ள காயார் கிராமத்தில் வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. மூலவர் வரதராஜ பெருமாள். துணைவிகளான ஸ்ரீதேவி பூதேவியுடன் நின்ற கோலத்தில் காட்சி தருகின்றனர். 17ம் நூற்றாண்டில் நாயக்க மன்னர்களால் இந்த கோயில் கட்டப்பட்டது. கோயிலின் நுழைவு வளைவில் தாயார் மற்றும் பெருமாளின் சிற்பங்கள் அழகு சேர்க்கின்றன. கருவறையை நோக்கிய முக மண்டபத்தின் முன் பலிபீடமும் கருடனும் காட்சியளிக்கின்றனர். முக மண்டபத்தின் தூண்களில் ஆனந்த சயன விஷ்ணு, நரசிம்மர், லட்சுமி, ராமானுஜர் சிற்பங்கள் உள்ளன. கோயில் வளாகத்தில் ஆழ்வார் உருவங்கள் பொறிக்கப்பட்ட சன்னதியும் உள்ளது. திருப்போரூர் கந்தசுவாமி கோயிலின் துணைக்கோயில்களில் ஒன்றாக, காயார் வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் இந்த கோயிலில் சம்ப்ரோக்ஷனம் நடந்தது. 8 லட்சம் ரூபாயில் சுதை சிற்பங்களுடன் நுழைவாயில் மற்றும் 8 அடி உயர சுற்றச்சுவர் கட்டப்பட்டுள்ளது. இங்குள்ள வரதராஜ பெருமாளை வேண்டினால், திருமணம் தடை, கடன் தொல்லை உள்ளிட்டவை நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. மார்கழி மாதம் பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.