உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / செங்கல்பட்டு / விஜய்க்கு அதிகாரம் என்ன? தவெக சிறப்புப் பொதுக்குழு தீர்மானம்

விஜய்க்கு அதிகாரம் என்ன? தவெக சிறப்புப் பொதுக்குழு தீர்மானம்

விஜய்க்கு அதிகாரம் என்ன? தவெக சிறப்புப் பொதுக்குழு தீர்மானம் | Mahabalipuram | TVK General Assembly Meeting | Vijays stance on alliance | TVK resolution செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் தனியார் நட்சத்திர விடுதியில் தவெகவின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தவெக நிர்வாகிகள் பங்கேற்றனர். தவெக தலைவர் விஜய் சிறப்புரையாற்றுகிறார். பொதுக்குழு கூட்டத்தில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் கரூர் துயர சம்பவத்தில் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அண்ணா பல்கலை மாணவிக்கு நேர்ந்த கொடுமை, அடுத்து கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை என வெற்று விளம்பர மாடல் திமுக ஆட்சியில் தமிழகம் தலைகுனிந்து நிற்கிறது. சட்டம் ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு உறுதி செய்யாத திமுக அரசுக்கு வன்மையான கண்டனங்களை சிறப்பு பொதுக்குழு பதிவு செய்கிறது தமிழகத்தில் வாக்காளர்களின் ஜனநாயக கடமையான வாக்குரிமையை பறிக்கும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தல் பணிகளை உடனே நிறுத்த வேண்டும். டெல்டா மாவட்டங்களில் உரிய நேரத்தில் நெல் கொள்முதல் செய்யாததால் விவசாயிகளுக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டது. விவசாயிகளின் விரோத ஆட்சியாளருக்கு கண்டனம். தமிழகத் தொழில் துறைக்கு வந்திருக்கும் முதலீடுகள் அவற்றின் மூலம் உருவான வேலை வாய்ப்புகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் கூட்டணி நிலைப்பாட்டில் கட்சித் தலைவர் விஜய்க்கு முழு அதிகாரம் வழங்கும் தீர்மானம் உட்பட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நவ 05, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை