உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சென்னை / 3 கிராம பக்தர்கள் ஒருபுறம், 7 கிராம பக்தர்கள் மறுபுறம் மோதல் | Andhra | Malleswara Swamy Thadiyadi

3 கிராம பக்தர்கள் ஒருபுறம், 7 கிராம பக்தர்கள் மறுபுறம் மோதல் | Andhra | Malleswara Swamy Thadiyadi

மல்லேஸ்வர சுவாமி தடியடி திருவிழா 2 பேருக்கு சோகம், 100 பேர் காயம் டைட்டில்: 3 கிராம பக்தர்கள் ஒருபுறம், 7 கிராம பக்தர்கள் மறுபுறம் மோதல் / Andhra / Malleswara Swamy Thadiyadi Festival தேவாரகட்டு பகுதியில் மக்களைத் துன்புறுத்திய மணி மற்றும் மல்லசுரனை, மால மல்லேஸ்வர சுவாமியும் பார்வதி தேவியும் வெற்றி பெற்றதன் நினைவாக விஜயதசமியன்று இரவு தடியடி திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு திருவிழா கோயிலில் வெகு விமர்சையாக நடைபெற்றது. வீதி ஊர்வலத்தின் போது சிலைகளைப் பாதுகாக்க 3 கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் ஒருபுறமும், கட்டைகளுடன் மறுபுறம் 7 கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் சண்டையிடுவார்கள். விநோத உற்சவ திருவிழாவிற்காக கர்னூல் மாவட்ட எஸ்பி விக்ராந்த் பாட்டீல், துணை கலெக்டர் மௌரிய பரத்வாஜ், ஆர்டிஓ பரத் நாயக் ஆகியோர் தலைமையில் கண்காணித்தனர். காலையில் சுவாமி தாயார் திருக்கல்யாணம் நடைபெற்றது. ஊர்வலம் தொடங்கி சுவாமி சிலைகளை நெரானி, நெரானிகிதண்டா மற்றும் கோத்தபேட்டா கிராமங்களைச் சேர்ந்தவர்கள் ஒருபுறமும் அரிகேரா, அரிகேரதண்டா, சுலுவாய், எல்லார்தி, குருகுண்டா, பிலேஹால், விருபபுரம் கிராமங்களை சேர்ந்தவர்கள் மறுபுறம் இருந்து குச்சிகளால் தாக்கி கொண்டதில் ரத்தக்களரியாக மாறியது. சாமி சிலைகள் பசவன்னகூடுவை அடையும் போது கட்டைகளால் தாக்கி கொள்ளும் சண்டை நிறுத்தப்பட்டது. இந்த நூதன உற்சவ மோதலில் 2 பக்தர்கள் இறந்தனர். 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 5 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அதோனி ஹாஸ்பிடலில் அட்மிட் செய்யப்பட்டனர். பல பக்தர்கள், காயமடைந்து, அங்கு கிடைக்கும் மஞ்சளை காயத்தில் பூசி சிகிச்சை எடுக்காமல் சென்றனர்.

அக் 03, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை