தீவிரமடைந்த தென்மேற்கு பருவமழை | Rain Warning | TN
கேரளா, தெற்கு கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. தென்னிந்தியப் பகுதிகளின் மேல் வளி மண்டல காற்று சுழற்சி தொடர்ச்சியாக நீடித்து வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்கள் மற்றும் புதுச்சேரியில் இடி, மின்னலுடன் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வரும் 31ம் தேதி வரை இதே நிலை தொடர வாய்ப்புள்ளது. மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோர பகுதிகள், குமரிக்கடல் பகுதிகளில் வரும் 29 வரை சூறாவளி காற்று வீசலாம்.
ஆக 26, 2024