உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சென்னை / மாநில போக்குவரத்து ஆணையரகம் கப்சிப் | Server Problem | RTO Office is down

மாநில போக்குவரத்து ஆணையரகம் கப்சிப் | Server Problem | RTO Office is down

தமிழகத்தில் 150 வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் மற்றும் யூனிட் அலுவலகங்களில் ஓட்டுனர் உரிமம், புதிய வாகனங்கள் பதிவு, உரிமம் புதுப்பித்தல் உட்பட பல்வேறு பணிகள் நடக்கின்றன. இந்த சேவைகளை பெற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். அடிக்கடி சர்வர் பிரச்னை ஏற்படுவதால் இந்தப் பணிகள் முடங்குகின்றன. முன்பெல்லாம் எப்போதாவது தான் பிரச்னை ஏற்படும். சமீப காலமாக வாரத்தில் 3 நாட்கள் சர்வர் பிரச்னை ஏற்படுகிறது என தமிழ்நாடு சுதந்திர வாடகை வாகன சங்க மாநில பொதுச்செயலர் ஜூட் கேத்யூ குற்றம் சுமத்தினார். ஒவ்வொரு முறையும் பாதி அளவில் தான் விண்ணப்பிக்க முடிகிறது. திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு மீண்டும் முதல் பக்கத்திற்கே வந்து விடுகிறது. ஆன்லைனில் கட்டணம் செலுத்தவோ, அதற்கான ரசீது பெறவோ முடியவில்லை. மீண்டும் அடுத்த நாள் வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு செல்ல வேண்டியுள்ளது. அதனால், வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் ஓட்டுனர் உரிமம், வாகனங்கள் தொடர்பான ஆவணங்கள் பெறமுடியாமல் அவதிப்படுகின்றனர் என ஜூட் கேத்யூ கூறினார். தொழில்நுட்ப கோளாறு ஏற்படுவது உண்மை தான். இதுகுறித்து, தலைமை அலுவலகத்திற்கு புகார் தெரிவித்துள்ளோம் என வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் தெரிவிக்கின்றனர் மாநில போக்குவரத்து ஆணையரகம் இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணவில்லை. மத்திய போக்குவரத்து அமைச்சகத்துக்கு தகவல் சென்றதா என்றும் தெரியவில்லை என கூறுகின்றனர்.

ஆக 05, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !