/ மாவட்ட செய்திகள்
/ சென்னை
/ தேர் பவனியில் பங்கேற்ற திரளான கிறிஸ்தவர்கள் | Chennai | Shagaya annai 50th year festival
தேர் பவனியில் பங்கேற்ற திரளான கிறிஸ்தவர்கள் | Chennai | Shagaya annai 50th year festival
சென்னை மணலி பாடசாலை தெருவில் உள்ள இடைவிடா சகாய அன்னை ஆலய 50ம் ஆண்டு திருவிழா கடந்த 27 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 9 வது நாள் நிகழ்வான தேர் திருவிழா நேற்று வெகு விமரிசையாக நடைப்பெற்றது. முன்னதாக சென்னை மயிலை உயர் மறை மாவட்டம் இயக்குனர் ஃபாதர் ஜேக்கப் மற்றும் மணலி பங்கு தந்தை காணிக்கை ராஜ் தலைமையில் கூட்டு திருப்பலி நடைப்பெற்றது. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட தேரில் இடைவிடா சகாய அன்னை தேர் பவனி மணலி முக்கிய வீதிகளில் வலம் வந்தது. திரளான கிறிஸ்தவர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.
அக் 06, 2024