/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ அடிவாரத்தில் இருந்து கோயில் வரை டூவீலர்கள், கார்கள் செல்ல தடை Coimbatore Marudamalai Subramania
அடிவாரத்தில் இருந்து கோயில் வரை டூவீலர்கள், கார்கள் செல்ல தடை Coimbatore Marudamalai Subramania
முருகனின் ஏழாம் படை வீடு என அழைக்கப்படும் மருதமலை சுப்ரமணிய சுவாமி கோயிலில் ஆடி கிருத்திகை விழா வெகு விமரிசையாக நடந்தது. அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு மூலவருக்கு, 16 வகையான திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. காலை 11 மணிக்கு, வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி, மலர் அலங்காரத்தில் எழுந்தருளி, திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த
ஜூலை 29, 2024