/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ அண்ணா பல்கலைக்கு 300 கோடியில் பிரமாண்ட சென்டர்! வேற லெவலில் மாறப்போகுது கோவை
அண்ணா பல்கலைக்கு 300 கோடியில் பிரமாண்ட சென்டர்! வேற லெவலில் மாறப்போகுது கோவை
கோவை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பொது இன்ஜினீயரிங் வசதி மேலாண்மை மையம் அமைய உள்ளது. இதற்கு ரூ. 300 கோடி தேவைப்படும். அதில் ரூ. 200 கோடியை டாடா நிறுவனம் சி.எஸ்.ஆர்., நிதியில் இருந்து தருகிறது. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. டிட்கோ என்ற தமிழ்நாடு தொழில்முதலீட்டு கழகம் இதற்கான கட்டடத்தை கட்டி தருகிறது. இந்த ஒப்பந்தப்படி முதல் கட்டமாக 11 ஆய்வகங்கள் அமைக்கப்படுகின்றன. இந்த ஆய்வகங்கள், கோவையில் உள்ள சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும். இது தவிர பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கும் இது உதவியாக இருக்கும். கோவை அண்ணா வளாகத்தில் அமைய உள்ள பொது இன்ஜினியரிங் மையம் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஆக 05, 2024