திருப்பூரில் 15வது ஆண்டு மூத்தோர் தடகளப் போட்டி | Audelt Athlatic Sports | Tripur
திருப்பூர் மாவட்ட மூத்தோர் தடகள சங்கம் சார்பில் 15 வது ஆண்டு மாவட்ட மூத்தோர் தடகள போட்டி கே.செட்டிபாளையம் விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. மாவட்ட மூத்தோர் தடகள சங்க தலைவர் சுந்தரராஜன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் விஸ்வநாதன் வரவேற்றார். பள்ளி தாளாளர் சுவாமிநாதன் போட்டிகளை துவக்கி வைத்தார். மாநில தடகள சங்க துணைத் தலைவர் சண்முகசுந்தரம் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். 100, 200, 400, 800, 1,500, 5,000 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்தல், குண்டு எறிதல், வட்டுஎறிதல் உள்ளிட்ட போட்டிகளில் 251 பேர் ஆர்வத்துடன் பங்கேற்றனர். 30 வயதுக்கு மேற்பட்டோர் முதல் 85 வயதை கடந்தவர் வரை பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதில் 50 வயதுக்கு உட்பட்டவர் பிரிவில் குறைவானவர்களே பங்கேற்றனர். அதே நேரம் 50 முதல் 60 மற்றும் 65 வயது பிரிவில் ஆர்வமுடன் பலர் பங்கேற்றனர்.