உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / 2 சகோதரர்கள், தந்தையை இழந்து பரிதவிக்கும் பார்வையற்ற பட்டதாரி | The Tragedy of the Blind Graduate

2 சகோதரர்கள், தந்தையை இழந்து பரிதவிக்கும் பார்வையற்ற பட்டதாரி | The Tragedy of the Blind Graduate

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே அத்திக்குன்னா எஸ்டேட் தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பை சேர்ந்தவர் 38 வயது பிரேம்குமார். இவர் பிறவியிலேயே பார்வையற்றவர். எனினும் தன்னம்பிக்கை, விடாமுயற்சி காரணமாக கோவை பார்வையற்றோர் பள்ளியில் மேல்நிலை வகுப்பு நிறைவு செய்தார். தொடர்ந்து ஊட்டி அரசு கல்லூரியில் பி. ஏ. வரலாறு பட்டம் பெற்றார். வேலூரில் ஆசிரியர் பயிற்சியும் நிறைவு செய்தார். கோவிட் கோரத்தாண்டவம் ஆடிய காலகட்டத்தில் இவருக்கு அனைத்து வகையிலும் உதவிய சகோதரர் குமார் சாலை விபத்தில் பலியானார். மற்றொரு சகோதரர் இளையராஜா கோவிட் தொற்றால் இறந்தார். அதே ஆண்டு நோயால் பாதிக்கப்பட்ட இவரது தந்தை பெரியசாமியும் இறந்தார். ஒரே வருஷத்தில் குடும்பத்தை காப்பாற்றி வந்த மூன்று பேரும் இறந்த நிலையில் தனது சகோதரி மற்றும் 70 வயதான தாயாருடன் நிர்கதி ஆனார். இவரது சகோதரி தேயிலை எஸ்டேட்டில் கூலி வேலைக்கு செல்கிறார். அதிலிருந்து கிடைக்கும் சொற்ப தொகையை வைத்தே இவர்களின் குடும்பம் நகர்ந்ஐ வருகிறது. இதற்கிடையில் டி. என் .பி. எஸ். சி. குரூப் 2 தேர்வு எழுதி அதிலும் பிரேம்குமார் வெற்றி பெற்று வேலைக்காக காத்திருக்கிறார். குடும்ப வறுமை காரணமாக திருமணம் செய்யாமல் இருக்கும் சகோதரியின் உழைப்பால் மூவரும் வாழ்ந்து வருகின்றனர். தனது படிப்புக்கு ஏற்ற ஒரு வேலையை அரசு வழங்க முன் வந்தால் தனது குடும்பத்தை காப்பாற்ற ஏதுவாக இருக்கும் என்கிறார் பிரேம்குமார். இவரின் கோரிக்கைகள் குறித்து அரசுக்கு பலமுறை மனு கொடுத்தும், ஏனோ தீர்வு கிடைக்கவில்லை .எனினும் அரசு வேலை கனவுடன் காத்திருக்கும் பார்வையற்ற பட்டதாரி இளைஞர் உட்பட மூன்று ஜீவன்களின் வாழ்வாதாரம் கருதி அரசு உதவிட முன் வர வேண்டும்.

பிப் 04, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை