குழந்தைகளை போன்று பராமரிக்கப்படும் செல்லப்பிராணிகள்
வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளான நாய்களை அருகிலிருந்து கவனிக்க வேண்டும். ஆனால் வேலைக்கு செல்பவர்கள், வேலை விஷயமாக வெளியூர் செல்பவர்கள் மற்றும் சுற்றுலா செல்பவர்கள் தாங்கள் வளர்க்கும் நாய்களை எங்கே விட்டு செல்வது என்ற கேள்வி எழுகிறது. அவர்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், கோவையில் நாய்கள் காப்பகம் என்ற போர்டிங்குகள் பல உள்ளன. ஆனால் சில காப்பகங்களில் நாய்களை தனித் தனி கூண்டுகளில் அடைத்து வைத்திருப்பார்கள். சில இடங்களில் நம் வீட்டில் எப்படி நாய்கள் சுதந்திரமாக சுற்றி விளையாடுகின்றனவோ அதுபோல சுழலை கொண்ட காப்பகங்களும் உள்ளன. அத்தகைய சூழல் கொண்ட செல்லப் பிராணிகளின் காப்பகங்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
பிப் 22, 2024