/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ கோவை பிரமாண்ட மைதானத்தில் 5 வகையான விளையாட்டு போட்டி|Coimbatore|District Sports Tournament
கோவை பிரமாண்ட மைதானத்தில் 5 வகையான விளையாட்டு போட்டி|Coimbatore|District Sports Tournament
கோவையில் தியாகி என்.ஜி.ராமசாமி நினைவு சுழற்கோப்பை விளையாட்டு போட்டிகள் வரதராஜபுரம் தியாகி என்.ஜி.ஆர். நினைவு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. மாவட்ட அளவில் 4 நாட்கள் நடைபெறும் போட்டிகளில் கோவை மாவட்ட மாநகராட்சி, அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் என 80 க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த 2500 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். 14, 17 மற்றும் 19 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு தனித்தனியே போட்டிகள் நடைபெற்றன. கூடைப்பந்து, கைப்பந்து, கோகோ, கபடி மற்றும் பூப்பந்து என 5 வகையான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.
ஜூலை 20, 2024