தினமலர் பிரீமியர் லீக் கிரிக்கெட் இறுதிப்போட்டி விறுவிறு
தினமலர் பிரீமியர் லீக் கிரிக்கெட் இறுதிப்போட்டி விறுவிறு | Dinamalar Premier League Cricket Tournament | KPR College Champion | Covai கோவையில் தினமலர் நாளிதழ் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழுமம் இணைந்து நடத்திய கல்லுாரிகளுக்கு இடையேயான பிரீமியர் லீக் கிரிக்கெட் இறுதிப்போட்டி, கிருஷ்ணா ஆதித்யா கல்லுாரி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் கே.பி.ஆர். கலை அறிவியல் கல்லுாரி அணி முதலிடம் பிடித்து 50 ஆயிரம் ரொக்கப்பரிசுடன், வெற்றி கோப்பையை தட்டிச் சென்றது. breath: கல்லுாரிகளுக்கு இடையேயான, தினமலர் - பீரிமியர் லீக் கிரிக்கெட் போட்டி கடந்த 2 ம் தேதி துவங்கியது. எஸ்.என்.எம்.வி. கல்லுாரி, ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கல்லுாரி, சங்கரா கல்லுாரி, ஸ்ரீ சக்தி கல்லுாரிகளில் தனித்தனியாக நடந்த, டி-20 போட்டியில், மொத்தம் 32 கல்லுாரி அணிகள் பங்கேற்றன. இதில், மூன்று, நான்காவது இடங்களுக்கான போட்டி, ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கல்லுாரி மைதானத்தில் நடந்தது. காலை 8:00 மணிக்கு துவங்கிய இப்போட்டியில், டாஸ் வென்று, வி.எல்.பி., கலை அறிவியல் கல்லுாரி அணி, பேட்டிங் செய்தது. 20 ஓவர்களுக்கு, 9 விக்கெட்களை இழந்து, 112 ரன் எடுத்தது. பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லுாரி, 17.3 ஓவர்களுக்கு, 4 விக்கெட்களை இழந்து, 116 ரன் எடுத்து வெற்றி பெற்றது. பவுலிங்கில் 5 விக்கெட் வீழ்த்திய மாணவர் பரத், ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இவருக்கு, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி உடற்கல்வி இயக்குனர் ரவிச்சந்திரன் பரிசுக்கோப்பை வழங்கினார். விறுவிறுப்பான இறுதிப்போட்டியில், டாஸ் வென்று, கே.பி.ஆர்., கலை அறிவியல் கல்லுாரி பேட்டிங் செய்தது. 20 ஓவர்களுக்கு, 8 விக்கெட் இழப்பிற்கு, 151 ரன் எடுத்தது. அடுத்ததாக பேட்டிங் செய்த ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி, 10 விக்கெட்களையும் இழந்து, 19.1 ஓவருக்கு, 126 ரன் எடுத்தது. முதல்பரிசை தட்டிச் சென்ற கே.பி.ஆர். அணிக்கு, 76 ரன் எடுத்து தந்த, மாணவர் அருண்குமாருக்கு, ஆட்டநாயகன், தொடர் நாயகன், சிறந்த பேட்ஸ்மேன் ஆகிய மூன்று விருதுகள் வழங்கப்பட்டன. இவருக்கான விருதுகளை, சர்வதேச தடகள பயிற்சியாளர் முகமது நிஜாமுதீன் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்ப கல்லுாரி உடற்கல்வி இயக்குனர் மாரிசெல்வம் ஆகியோர் வழங்கினர். சிறந்த பவுலருக்கான விருது, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரியை சேர்ந்த மாணவர் ரானேஷிற்கு, வால்ரஸ் நிறுவன நிர்வாக இயக்குனர் டேவிட் வழங்கினார். இப்போட்டிகளை, வால்ரஸ் மற்றும் ஸ்போர்ட்ஸ் லேண்ட் நிறுவனங்கள் இணைந்து வழங்கின. breath: முதல் பரிசு வென்ற கே.பி.ஆர். கலை அறிவியல் கல்லுாரிக்கு, 50 ஆயிரம் ரொக்கப்பரிசுடன், வெற்றிக் கோப்பை வழங்கப்பட்டது. இரண்டாம் பரிசு வென்ற, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரிக்கு, 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பரிசுடன், கோப்பை வழங்கப்பட்டது. மூன்றாம் பரிசு வென்ற பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லுாரிக்கும், நான்காவது பரிசு, வி.எல்.பி. கலை அறிவியல் கல்லுாரிக்கும் முறையே தலா 15 ஆயிரம் மற்றும் 10 ஆயிரம் ரொக்கப்பரிசுடன், கோப்பை வழங்கப்பட்டது.