விமான பயணத்தை எளிதாக்க டிஜி யாத்ரா | நோ கியு; நோ ஐ.டி. புருப் | Digiyatra | Airport
விமானத்தில் பயணம் செய்யும் போது பயணிகள் 3 இடங்களில் சோதனைக்குட்படுத்தப்படுவார்கள். ஒன்று விமான நிலையத்தின் நுழைவு வாயில். அடுத்து பாதுகாப்பு பகுதி. மூன்றாவது போர்டிங் பகுதி. இந்த இடங்களில் பயணிகள் தங்கள் விமான டிக்கெட் மற்றும் அடையாள அட்டைகளை காண்பிக்க வேண்டும். இது பயணிகளுக்கு காலதாமதத்தை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், பல சிரமங்களையும் சந்திக்க வேண்டியுள்ளது. இதை தவிர்ப்பதற்காக கோவை விமானநிலையத்தில் டிஜி யாத்ரா என்ற புதிய நடைமுறை விரைவில் கொண்டு வரப்பட உள்ளது. இதன்படி பயணிகள் கியு வில் நிற்க வேண்டியதில்லை. அடையாள அட்டையை காண்பிக்க வேண்டியதில்லை. இந்த புதிய நடைமுறை குறித்து கோவை விமான நிலைய இயக்குனர் செந்தில் வளவன் விளக்கியுள்ளார். அதுபற்றிய வீடியோ தொகுப்பை காணலாம்.