உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / பல்லடம் நகராட்சி திமுக கவுன்சிலர் கணவர் ஆபாச பேச்சு

பல்லடம் நகராட்சி திமுக கவுன்சிலர் கணவர் ஆபாச பேச்சு

பல்லடம் நகராட்சி திமுக கவுன்சிலர் கணவர் ஆபாச பேச்சு / i will take of my clothes / dmk councilors husband / palladam பல்லடம் நகராட்சியில் கழிவு நீரை சுத்திகரிக்கும் திட்டத்தை செயல்படுத்த நகராட்சி திட்டமிட்டுள்ளது. இதற்காக நகரின் பல்வேறு பகுதிகளில் குழாய் பதிக்கும் பணிகள் நடக்கிறது. பல்லடம் பட்டேல் வீதியில் குழாய் பதிக்கும் பணிக்காக குழி தோண்டப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் பணிகளை தடுத்து நிறுத்தி மங்கலம் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். பொதுமக்கள் கூறுகையில், பல்லடம் ஓடையில் கழிவு நீரை கலப்பதே நகராட்சி தான். தற்போது இந்த கழிவு நீரை சுத்திகரிக்க உள்ளதாக கூறி மறியலில் ஈடுபட்டனர். அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி குழி தோண்டும் பணியை தற்காலிகமாக நிறுத்தினர். முன்னதாக 8 வது வார்டு நகராட்சி தி.மு.க., கவுன்சிலர் சுகன்யா தனது கணவர் ஜெகதீஷூடன் இணைந்து பொதுமக்களுடன் போராட்டத்தில் பங்கேற்றார். நீண்ட நேரம் காத்திருந்தும் அதிகாரிகள் யாரும் வரவில்லை. இனி காத்திருக்க முடியாது. சட்டையை மட்டுமல்ல; ஜட்டியையும் கழற்றி நிர்வாணமாக போராட்டத்தில் ஈடுபடுவேன் என்று மிரட்டல் விடுத்தார். சபரிமலைக்கு மாலை அணிந்து இருந்த நிலையில் கவுன்சிலரின் கணவர் ஜெகதீஷ் ஆபாசமாக பேசியது பொதுமக்களை முகம் சுளிக்க வைத்தது.

மார் 13, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை