8 தலைமுறையினர் பெயர்களுடன் புத்தகம் வெளியீடு | Family Function| Generation Tree | Happy Family
கஞ்சப்பள்ளி நாடார் குடும்ப திருவிழா 8 வம்சாவளியினர் 350 பேர் பங்கேற்பு Title : 8 தலைமுறையினர் பெயர்களுடன் புத்தகம் வெளியீடு | Family Function| Generation Tree | Happy Family | Covai இப்போ இருக்குற பல குழந்தைங்க அவங்க தாத்தவ கூட பார்த்ததில்ல. குறிப்பா பல பேருக்கு நம்ம தாத்தாவோட அப்பா பேரு கூட தெரியாது. அப்படி இருக்குற இந்த காலத்துல 8 தலைமுறையினர அடையாளம் கண்டு பிடிச்சு, சொந்தங்கள் கூட கை கோர்த்து ஒரு பிரம்மாண்டமான குடும்ப விழாவ கோவையில நடந்திருக்காங்க. 1869ம் ஆண்டு காலக்கட்டத்துல, கோவை கஞ்சப்பள்ளி கிராமத்துல வாழ்ந்தவங்க கருப்பண்ண நாடார் - குப்பாயி அம்மாள் தம்பதி. இவங்களோட தலைமுறையினர் ஒன்னு சேர்ந்து கோவையில விழா நடத்திருக்காங்க. இந்த வம்சாவளிய சேர்ந்த மூன்றாம் தலைமுறைல இருந்து இப்போ எட்டாவது தலைமுறையினர் வர சுமார் 350 பேர் விழாவுல கலந்துருக்காங்க. நிகழ்ச்சியில பல்வேறு போட்டி நடத்தினாங்க. இன்னாருக்கு இன்னார் என்ன உறவுன்னு கேள்வி பதில் போட்டியும் கலகலப்பா நடந்துச்சு. விழாவோட முக்கிய நிகழ்ச்சியா கருப்பண்ண நாடார்ல ஆரம்பிச்சு, இப்போ இருக்கிற கடைக்குட்டி வரைக்கும் எல்லாரு பேரு, ஊரு , உறவு முறைய குறிப்பிட்ட ஒரு புத்தகம் வெளியிட்டுருக்காங்க. வாழையடி வாழையா தழைச்சு, தலைமுறைகள் போனாலும், உறவுகள் பயணித்த தடம் தான் நம்ம அடையாளம். தனித்தனியா பிரிஞ்சு வாழ்ற இந்த காலத்துல எட்டு தலைமுறைகளை தேடிக் கண்டுபிடிச்சு அதை வருங்கால சந்ததியினருக்கு கொடுத்துட்டு போனும்ன்னு நினைக்கிற கருப்பண்ண நாடார் குடும்பத்துக்கு பலரும் சபாஷ் போட்டாங்க.