/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ தினமலர் செய்தி எதிரொலி! கடம்பன் கோம்பைக்கு விடிவு காலம் வந்தாச்சு
தினமலர் செய்தி எதிரொலி! கடம்பன் கோம்பைக்கு விடிவு காலம் வந்தாச்சு
கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள கடம்பன் கோம்பை என்ற மலை கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒருவர் உயிரிழந்தார். அவருடைய சடலத்தை எடுத்து வர ஆம்புலன்ஸ் செல்ல முடியாததால், டோலி கட்டி சடலத்தை துாக்கி வந்தனர். இந்த வீடியோ வைரல் ஆனது. இது தவிர அந்த கிராம மக்களுக்கு அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை. இது தொடர்பாக அந்த கிராம மக்களின் அவல நிலை குறித்து தினமலரில் செய்தி வெளியானது. இதைத் தொடர்ந்து அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டு இன்னும் இரண்டு மாதத்துக்குள் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும் என்று உறுதி அளித்தனர். இது பற்றிய வீடியோ தொகுப்பை காணலாம்.
மார் 05, 2025