/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ கட்டடத்தில் பேஸ்மென்ட் இப்படித்தான் அமைக்க வேண்டும்! கனவு இல்லம் | பகுதி - 3 | Basement
கட்டடத்தில் பேஸ்மென்ட் இப்படித்தான் அமைக்க வேண்டும்! கனவு இல்லம் | பகுதி - 3 | Basement
கட்டடத்துக்கு அஸ்திவாரம் போட்டு முடித்தால் பெரிய வேலை முடிந்தததாக பலர் நினைப்பதுண்டு. இதற்கு காரணம் அஸ்திவாரம் அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது. அடுத்து அஸ்திவாரத்தின் உயரம். அருகில் உள்ள சாலையின் உயரத்தை பொறுத்துத் தான் அஸ்திவாரத்தின் உயரம் தீர்மானிக்கப்படும். அஸ்திவாரத்துக்குள் நல்ல கிராவல் மண் போட்டு நிரப்ப வேண்டும். அதில் கட்டிட கழிவுகளை கொண்டு நிரப்பக் கூடாது. அஸ்திவாரம் போட்டு அதில் மண் நிரப்பும் போதே, செப்டிக் டேங்க், தண்ணீர் தொட்டி பணிகளையும் செய்ய வேண்டும். இல்லையென்றால் தண்ணீர் தொட்டி கட்டும் அருகில் அஸ்திவாரத்தில் உள்ள மண் இறங்க வாய்ப்பு ஏற்படும். இப்படி அஸ்திவாரம் போடுவது பற்றிய பல தகவல்களை இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
பிப் 23, 2024