உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / உயர்மட்ட மேம்பாலம் பணி முடியவில்லை... வேதனையில் மலைகிராமங்கள்

உயர்மட்ட மேம்பாலம் பணி முடியவில்லை... வேதனையில் மலைகிராமங்கள்

கோவை மாவட்டம் காந்தை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலம் ஒரு ஆண்டில் மூன்று முதல் ஆறு மாதங்கள் வரை மூழ்கி தான் இருக்கும். அந்த சமயத்தில் பொது மக்கள் பரிசல் அல்லது படகு வாயிலாகத் தான் கடந்து செல்வார்கள். அவர்களின் சிரமத்தை போக்கும் வகையில் காந்தையாற்றின் குறுக்கே மற்றொரு உயரமான பாலம் கட்ட திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கின. ஆனால் அந்த பணிகள் தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளன. கோடைக்காலம் முடிவதற்குள் பாலத்தின் கட்டுமான பணிகளை நிறைவேற்ற வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். காந்தையாற்று பாலம் கட்டுமான பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் கிராம மக்கள் படும் துயரங்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.

பிப் 04, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை