உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / மனபதற்றத்தை கைவிட்டால் மகிழ்ச்சியோடு வாழலாம் | மனமே நலமா? பகுதி- 26 | Dr.Srinivasan

மனபதற்றத்தை கைவிட்டால் மகிழ்ச்சியோடு வாழலாம் | மனமே நலமா? பகுதி- 26 | Dr.Srinivasan

சிலருக்கு திடீரென்று நெஞ்சு வலி வரும். இதயத் துடிப்பு, படபடப்பு அதிகமாக இருக்கும். அதே நேரம் அந்த வலி தோள்பட்டைக்கும், கைக்கும் இடையே பரவும். அதிகமாக வியர்க்கும். இது போன்ற அறிகுறிகள் வந்ததும் நமக்கு வந்திருப்பது மாரடைப்பு என்று முடிவு செய்து விட்டு அவசரமாக இதயநோய் டாக்டரை பார்ப்போம். உடனே அனைத்து பரிசோதனைகளையும் செய்து விட்டு அவை சரியாக இருக்கும் பட்சத்தில் எந்த பாதிப்பும் இல்லை என்று டாக்டர் சொல்வார். சில மாதங்கள் கழித்து அதே நபருக்கு அதே அறிகுறிகள் மீண்டும் வரும். இதற்காக பல டாக்டர்களை மீண்டும், மீண்டும் பார்த்த பின்னரும் அந்த நபருக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று டாக்டர் உறுதியாக சொல்லி விடுவார். இப்படி அடிக்கடி அறிகுறிகள் வருவது போன்று உணருவது மனபதற்றத்தின் உச்சகட்டம். இந்த மனபதற்றத்தை கைவிட்டால் மகிழ்ச்சியோடு வாழலாம் என்று விளக்குகிறது இந்த காணொளி தொகுப்பு.

ஜன 08, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை