/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ பதிவாளர், டிரைவர் உறவினர்களுக்கு நூதன முறையில் பணப்பரிமாற்றம் | Coimbatore | Raid
பதிவாளர், டிரைவர் உறவினர்களுக்கு நூதன முறையில் பணப்பரிமாற்றம் | Coimbatore | Raid
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சார் பதிவாளர் அலுவலகத்தில். கோவை லஞ்ச ஒழிப்பு ஏடிஎஸ்பி திவ்யா, இன்ஸ்பெக்டர் எழிலரசி தலைமையிலான போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். விடிய விடிய நடந்த சோதனையில் பல்வேறு முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டது. ஒரே நாளில் 25 லட்சத்து 33 ஆயிரம் ரூபாய் ஜிபே மூலம் லஞ்சம் பெற்றது அம்பலமானது. பத்திரப்பதிவு அலுவலகத்தில் பணியாற்றும் நவீன்குமார், சார்பதிவாளர் சாந்தியின் டிரைவர் ராஜுவும் பணப்பரிவர்த்தனைக்கு உடைந்தையாக இருந்தது தெரிந்தது. சார்பதிவாளர் சாந்தி நேரடியாக பணம் பெறாமல் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு ஜிபே மூலமாக லஞ்சம் வாங்கியது அம்பலமானது. லஞ்ச ஒழிப்பு போலீசார் பதிவாளர் மற்றும் அலுவலக பணியாளர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆக 09, 2024