பழங்குடியின மாணவர்களுக்கு கல்வி வழி காட்டும் வழி துணையாளர்கள்
தமிழக அரசின் பள்ளி கல்வி துறை சார்பில்,நீலகிரி மாவட்டத்தில் வனப்பகுதிகள் மற்றும் வாகன வசதிகள் இல்லாத பகுதிகளில் இருந்து, மாணவர்களை பள்ளிகளுக்கு அழைத்து வர வழி துணையாளர்கள் மற்றும் வாகன வசதிகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளனர். இதில் பந்தலூர் அருகே முதுமலை புலிகள் காப்பக எல்லைக்குள் உள்ள மண்ணின் மைந்தர்களான, பழங்குடியின மாணவர்களை முழு எழுத்தறிவு பெற்ற தலைமுறையினராக மாற்றும் செயலில் கல்வித்துறை ஈடுபட்டுள்ளது வரவேற்பை பெற்று உள்ளது. இதற்காக நியமிக்கப்பட்டுள்ள வழித்துணையாளர்களின் பணிகள், வாகன வசதிகள் குறித்து இந்த காணொளி தொகுப்பு விளக்குகிறது.
ஆக 31, 2024