வால்பாறையில் அடிப்படை வசதியின்றி பழங்குடிகள் பரிதாபம் |no road fecility | tribal distress |valparai
வால்பாறையில் அடிப்படை வசதியின்றி பழங்குடிகள் பரிதாபம் / no road fecility / tribal distress / valparai கோவை மாவட்டம் வால்பாறை அடுத்துள்ளது உடுமன்பாறை செட்டில்மென்ட். இப்பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ் வயது 58. ஆதிவாசியான இவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. தொடர்ந்து ரோடு வசதி இல்லாத கரடு முரடான மலை வழிப்பாதையில் தொட்டில் கட்டி ஆதிவாசிகள் கொண்டு சென்றனர். ஆம்புலன்ஸ் அங்கே வர முடியாததால் நல்லமுடி எஸ்டேட்டிற்கு எட்டு கிலோமீட்டர் தூரம் தூக்கி சென்று சிகிச்சை அளித்து உள்ளனர். மலைப்பகுதியில் சாலை வசதி இல்லாமல் தொட்டில் கட்டி தூக்கிச் சென்று உயிர் காக்கும் முயற்சி தொடர் கதையாகி வருகிறது. இந்த சம்பவத்துக்கு பாஜ முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். வால்பாறையிலும், இதே போன்று பல பகுதிகளிலும் சாலை வசதி இல்லை. ஆனால் மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு பகுதிக்கும் சாலை வசதி இருப்பதாக திமுக அரசு கூறுகிறது. இப்போதும் கூட உயிருக்காக போராடும் சூழலில் தொட்டில் கட்டி தூக்கி செல்லும் அவலம் இதயத்தை கனமாக்குகிறது. 4 ஆண்டுகளில் மத்திய அரசு கிராம சதக் யோஜனா திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு 2,043 கோடியை விடுவித்துள்ளது. அந்த நிதியில் போட்ட சாலைகள் எங்கே? பணம் எங்கே போனது என அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.