ஆர்கானிக் நாப்கின்... காய்கறி கழிவில் லெதர்! கோவை கல்லூரியின் அசத்தல் ஆராய்ச்சி
அனைவரின் வீடுகளிலும் பயன்படுத்தப்படும் பொருள் டயபர் மற்றும் சானிடரி நாப்கின். இது இப்போது மூலிகையில் தயாரிக்கப்படுகிறது. இளைஞர்கள் தோல் பொருட்களை அதிகம் விரும்புவார்கள். ஆனால் அந்த தோல் பொருட்கள் ஒரு விலங்கு இறந்த பின்னர் தான் கிடைக்கிறது. விலங்குகளிடமிருந்து அந்த தோல் கிடைப்பதால் அதை பலர் விரும்புவதில்லை. ஆனால் தோல் பொருட்களை அவர்கள் விரும்புவார்கள். அவர்களை போன்றவர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் குறிப்பாக நார்சத்து மிகுந்த பழங்கள் மற்றும் காய்கறிகளின் தோலில் இருந்தும் தோல் தயாரிக்கப்படுகிறது. இதன் வாயிலாக ேஹண்ட்பேக் உள்பட பல பொருட்கள் தயாரிக்கலாம். இன்னும் சில காலங்களில் உடை கூட காய்கறி தோலில் இருந்து தயாரிக்க முடியும் என்று கூறப்படுகிறது. இது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.