நிதி வந்தவுடனே கட்டுவாங்க... ஆதிதிராவிட நலத்துறை அலுவலரின் அலட்சிய பதில்
கோவை மாவட்டம் அன்னூர் ஒன்றியம் பசூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அரசு ஆதிதிராவிட நல உயர்நிலைப்பள்ளி செயல்படுகிறது. இந்த பள்ளியின் கட்டடம் சேதமடைந்துள்ளது. ஆகையால் பள்ளியின் ஒரு பகுதியில் இருந்த கட்டடம் இடிக்கப்பட்டது. இடிக்கப்பட்ட வகுப்பறையில் இருந்த மாணவர்கள் ஏற்கனவே இருந்த வகுப்பறையில் இருந்த மாணவர்கள் என அனைவரும் சேர்ந்து இட நெருக்கடியில் படித்து வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் போதிய ஆசிரியர்களும் இல்லை. கழிப்பறை வசதி இல்லாததால் தொடக்கப்பள்ளி மாணவர்கள் உயர்நிலைப் பள்ளியில் உள்ள கழிப்பறையை பயன்படுத்தி வருகிறார்கள். இந்த பள்ளி வளாகத்தில் சுற்றுச்சுவர் சிதலமடைந்து ஒரு பகுதி இடிக்கப்பட்டுள்ளது. இதனால் சமூக விரோதிகள் இரவு நேரங்களில் இந்த வகுப்பறைகளை பயன்படுத்தி வருகிறார்கள். போதிய பாதுகாப்பு இன்றி செயல்படும் பள்ளியின் அவல நிலை குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.