உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துதர வலியுறுத்தல் | pregnant women carried down | Kovai

சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துதர வலியுறுத்தல் | pregnant women carried down | Kovai

கோவை உடுமலை பகுதியில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசிக்கின்றனர். 18 மலை கிராமங்களில் சாலை வசதி இல்லாததால் வனப்பகுதியில் நடந்தே செல்கின்றனர். இந்நிலையில் குருமலை குடியிருப்பை சேர்ந்த 2 மாத கர்ப்பிணி சுமதிக்கு திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டது. முறையான சாலை வசதி மற்றும் மருத்துவ வசதி இல்லாததால் சுமதியின் உறவினர்கள் சேலையில் தொட்டில் கட்டி சுமதியை தூக்கி சென்றனர். காலை 11 மணிக்கு தொடங்கிய மரண பயணம் மாலை 3 மணிக்கு முடிவடைந்தது. குருமலையில் இருந்து சுமதியை 10 கிலோமீட்டர் தூரம் தூக்கி வந்து திருமூர்த்திமலையை அடைந்தனர். அங்கிருந்து அம்புலன்ஸ் மூலம் சுமதியை உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். பல ஆண்டுகளாக போராடி உரிய சாலை வசதி இல்லாததால் அப்பாவி மக்களின் உயிர் பறிபோகியுள்ளது. மலைவாழ் மக்கள் உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சை பெற தமிழக அரசு சாலை வசதிகளை செய்து தர வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

நவ 22, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை