6 வயதில் விட்டுட்டிங்களா... 40 வயதில் பரதம் கற்கலாம்...
தென்னகத்தின் பாரம்பரிய கலையான பரதக்கலை, உயர்ந்த மதிப்புள்ள கற்றல் கலையாக விளங்கி, இன்று, உலகம் முழுவதும் பரவியுள்ளது. குறிப்பாக, யோகாவில் உள்ள பல ஆசனங்கள், இந்த கலையில் இணைந்து வருவது தான். பரதம் ஆடினால், உடல் பாகங்கள் சுறுசுறுப்பு பெற்று புத்துணர்வு பெறும். குறிப்பாக, பெண்களுக்கு ஒரு எளிய உடற்பயிற்சி என்று கூட சொல்லலாம். முந்தைய காலத்தில், பெண்களை, பரதம் கற்க அனுப்பமாட்டார்கள். இன்று, பரதக்கலை, வாழ்வில் ஓர் அங்கம் என்பதை உணர்ந்து, அவசியம் கற்க வேண்டுமென, பெற்றோர் அனுப்பி வைக்கின்றனர். இன்றைய காலகட்டத்தில், நேர மேலாண்மை அவசியம். பரதநாட்டியம் கற்றவர்கள், நேர மேலாண்மையில் சிறந்து விளங்குவார்கள். வழக்கமான கல்வி, நடன பயிற்சி, தேர்வுகளுக்கான பயிற்சி என, நேர்த்தியாக நேரத்தை செலவு செய்து வெற்றி பெறுவார்கள். அத்தகைய பரதக் கலை பற்றி இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.