அதிகாரிகள் மற்றும் போலீஸ் 'மாமூல்' வாழ்க்கை அமோகம்
அதிகாரிகள் மற்றும் போலீஸ் மாமூல் வாழ்க்கை அமோகம் | soil smuggling | police and revenue department did not find out | palladamyh திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஆள் அரவமற்ற காட்டுப்பகுதியில் செம்மண் கடத்தல் ஜோராக நடக்கிறது. மண் அள்ளுவதற்காக பூமியில் மிக ஆழமாக குழி தோண்டியதால் ஆங்காங்கே செயற்கை குளங்கள் உருவாகி உள்ளது. வருவாய்த்துறை, கனிமவளத்துறை, ஊரக வளர்ச்சி, காவல் துறை என பல்வேறு அரசுத்துறைகள் இருக்கிறது. எனினும் மண் கடத்தல் மாமியா கும்பல் அனைத்துத்துறை அதிகாரிகளையும் சரிகட்டி மண் கடத்தலை 24 மணி நேரமும் ஜோராக நடத்தி வருகிறது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், தொட்டம்பட்டி கிராமத்தில் உள்ள சரஸ்வதி கார்டன் எனும் வீட்டுமனை பிரிவு பல ஆண்டுகளாக பயன்படாமல் உள்ளது. ஆள் அரவமற்ற காட்டுப்பகுதியில் உள்ள இந்த மனைப்பிரிவின் ரிசர்வ் சைட்டில் தொடர்ச்சியாக மண் எடுக்கப்பட்டு வருகிறது. செம்மண் டிப்பர் ஒன்று 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் விற்பனையாகி வரும் நிலையில் நூற்றுக்கணக்கான யூனிட் செம்மண் இங்கிருந்து கடத்தப்பட்டு வருகிறது. பல அடி ஆழத்துக்கு செம்மண் அள்ளப்பட்டதால் இப்பகுதியில் மிகப்பெரிய அளவில் குளம் உருவாகியுள்ளது. மண் அள்ளுவதற்காக இங்குள்ள சில மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டன. டிப்பர் லாரிகள், பொக்லைன் வந்து செல்ல வசதியாக இப்பகுதியில் பிரத்தியேக வழித்தடமும் உருவாக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் மண் கடத்தல் ஜோராக நடக்கிறது. மண் கடத்தல் மாமியா கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தினர்.