கோவை பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு | Sports | Covai
கோவை மாவட்ட பள்ளிக் கல்வித்துறை சார்பில் ஆண்டுதோறும் மாணவ, மாணவிகளுக்கான குறுமையம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகிறது. இந்தாண்டுக்கான குறுமைய போட்டிகள் கோலாகலமாக துவங்கியது. மேற்கு குறுமைய போட்டிகள் பாரதியார் பல்கலை வளாகத்திலும், புறநகர் குறுமைய போட்டிகள் எஸ்.பி.ஓ.ஏ. பள்ளியிலும் நடைபெற்றது. போட்டிகளை கோவை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் குமரேசன் துவக்கி வைத்தார். தொண்டாமுத்துார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி சார்பில் மேற்கு குறு மையத்துக்கு உட்பட்ட மாணவியர் பிரிவு போட்டிகள் நடைபெற்றன. இதில் கால்பந்து, கோ கோ, வாலிபால், கபடி உள்ளிட்ட 19 பிரிவில் போட்டிகள் நடத்தப்பட்டன. வெற்றி பெறும் மாணவ - மாணவியர் மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெறுவர்.