1,500 மீட்டர் ஓட்டத்தில் சீறிய வீராங்கனை | sports meet | covai
1,500 மீட்டர் ஓட்டத்தில் சீறிய வீராங்கனை / sports meet / covai தியாகி என்.ஜி. ராமசாமி நினைவு மேல்நிலைப் பள்ளி சார்பில் கிழக்கு குறுமைய தடகளப் போட்டிகள் கோவை நேரு ஸ்டேடியத்தில் துவங்கியது. இதில் 1,200 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். போட்டிகளை மாவட்ட கல்வி அலுவலர் கோமதி, மாவட்ட விளையாட்டு அலுவலர் புவனேஸ்வரி, என்.ஜி.ஆர்., பள்ளி தலைமையாசிரியர் சதாசிவம் துவக்கி வைத்தனர். 17 வயதுக்கு உட்பட்ட மாணவியருக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் இனியாஸ்ரீ, ரேஷ்மி, பூவிழி நர்சனா ஆகியோரும், 14 வயதுக்கு உட்பட்டோருக்கான 400 மீட்டர் ஓட்டத்தில், அஞ்சனா, அன்னலட்சுமி, பிரியா ஆகியோரும் முதல் மூன்று இடங்களை பிடித்தனர். 19 வயதுக்கு உட்பட்டோருக்கான 1,500 மீட்டர் ஓட்டத்தில் ஹன்சினி, ஹூமைதா தேகம், ஸ்ரீனா ஆகியோரும், 17 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான 400 மீட்டர் ஓட்டத்தில் ஹரிஷ், அபிஷேக் டேனியல், சபரிநாதன் ஆகியோரும் முதல் மூன்று இடங்களை வென்றனர். 19 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான நீளம் தாண்டுதலில் பிரின்ஸ் இமானுவேல், பிரணவ், கிஷோர் ஆகியோரும், 14 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான வட்டு எறிதலில், நிதிஷ், பிரவீன்குமார், மோனிஷ்குமார் ஆகியோரும் முதல் மூன்று இடங்களை வென்றனர்.