பெண்கள் தாலப்பொலி ஏந்தி பக்தி பரவசம் | sri aayeram villi bhagavathi amman temple choriot festival
பெண்கள் தாலப்பொலி ஏந்தி பக்தி பரவசம் / sri aayeram villi bhagavathi amman temple choriot festival / cuddalore நீலகிரி மாவட்டம் கூடலூர் புளியரம்பாறை ஸ்ரீஆயிரம் வில்லி பகவதி அம்மன் கோயில் தேர்த் திருவிழா நேற்று முன்தினம் அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்கியது. காலை 9 மணிக்கு கொடியேற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து பெரிய வீடு வண்ணார குடியிலிருந்து புறப்பட்ட இளநீர் பூங்குழல், தாலப்பொலியுட துவங்கிய ஊர்வலம் கோயிலை வந்தடைந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து நேற்றிரவு 8 மணிக்கு அட்டிக்கொல்லி பகவதி அம்மன் கோயிலில் இருந்து செண்டை மேளம், சிங்காரி மேளம் இசையுடன் தேர் ஊர்வலம் துவங்கியது. ஊர்வலத்தில் குழந்தைகள் மற்றும் பெண் பக்தர்கள் தாலப்பொலி ஏந்தி பங்கேற்றனர். ஊர்வலம் மரப்பாலம் - புளியம்பாறை வழியாக கோயிலை சென்றடைந்தது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இன்று காலை 7 மணிக்கு உஷ பூஜை, வழிப்பாடு பூஜைகளுடன் விழா நிறைவு பெற்றது. ஏற்பாடுகளை கோயில் கமிட்டி மற்றும் ஊர் மக்கள் செய்திருந்தனர்.