உலக நன்மை வேண்டி சிறப்பு திருவிளக்கு பூஜை | Tamilnadu Brahmanar sanga sumangali poojai| Hosur
உலக நன்மை வேண்டி சிறப்பு திருவிளக்கு பூஜை / Tamilnadu Brahmanar sanga sumangali poojai/ Hosur ஓசூரில் பிராமண சங்கம் சார்பில் சுமங்கலி பூஜை மற்றும் விளக்கு பூஜை நடைபெற்றது. ஸ்ரீ சங்கர சாக்தானந்த சுவாமிகள் பூஜையை துவக்கி வைத்தார். மழை பெய்து விவசாயம் செழிக்கவும், உலக நன்மை வேண்டியும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பூஜையில் விஷ்ணு சகஸ்ரநாமம் மற்றும் லலிதா சகஸ்ரநாமம் பாராயணம் செய்யப்பட்டது. அலங்கரிக்கப்பட்ட குத்துவிளக்கை அம்மனாக பாவித்து அஷ்டோத்திர சத நாமாவளி பூஜைகள் நடைபெற்றது. 11 கன்னிப் பெண்களுக்கு கன்யா பூஜையும், 108 சுமங்கலி பெண்களுக்கு சுவாசினி பூஜையும் நடைபெற்றது. பூஜையில் பெண்களை அம்மனாக பாவித்து மாலை அணிவித்து சந்தனம் குங்குமம் வைத்து வழிபட்டனர். மங்கள ஆரத்தி மற்றும் கற்பூர தீபாராதனை காட்டப்பட்டது. பிரசாதம் வழங்கப்பட்டது. திரளான பெண்கள் பூஜையில் கலந்து கொண்டனர்.