பழங்குடியினர் இசை வாத்தியம் மற்றும் பாரம்பரிய நடன நிகழ்ச்சி களைகட்டியது | Temple festival
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே ஏலமன்னா பகுதியில் நூற்றாண்டு பழமையான ஸ்ரீபகவதி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலின் மறு பிரதிஷ்ட விழா கடந்த பிப்ரவரி 10ம் தேதி சிறப்பு பூஜைகளுடன் துவங்கியது. விழாவையொட்டி இன்று காலை ஹோமம், பீடம் பிரதிஷ்டை, கலச பூஜைகள், கலச தரிசன பூஜைகள் நடைபெற்றன. அதைத் தொடர்ந்து அம்மனை கோயில் பீடத்தில் வைத்தல், கோயிலை சுற்றி திருவிளக்கு ஏற்றும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தந்திரி ராஜன் தலைமையிலான குழுவினர் பூஜைகள் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் கமிட்டி தலைவர் ராகவன், செயலாளர் குஞ்சுராமன் தலைமையில் நடைபெற்றது. விழாவில் பழங்குடி மக்களின் இசை வாத்தியம் மற்றும் பாரம்பரிய நடன நிகழ்ச்சிகள் பக்தர்களை வெகுவாக கவர்ந்தது. சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது