விவசாயிகள் கவலை | Tomato prices down | Udumalai
உடுமலை பகுதியில் வீரிய ஒட்டு ரக தக்காளி அதிகளவு சாகுபடி நடக்கிறது. விளைச்சல் அமோகமாக இருப்பதால் உடுமலை நகராட்சி சந்தைக்கு தக்காளி வரத்து அதிகரித்தது. உடுமலை நகராட்சி சந்தையில் 14 கிலோ தக்காளி பெட்டி 250 ரூபாய் வரை ஏலம் போனது. இங்கிருந்து தக்காளி டன் கணக்கில் லாரிகள் மூலம் ஒட்டன்சத்திரம் மற்றும் கேளரா மாநிலத்துக்கு அனுப்பப்பட்டது. தக்காளி விளைச்சல் அதிகமாகி விலை குறைந்ததால் விவசாயிகள் கவலையடைந்தனர்.
ஆக 11, 2024