உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / பட்டிமன்றத்தில் ருசிகரம் | Valluvar about Aadhaar

பட்டிமன்றத்தில் ருசிகரம் | Valluvar about Aadhaar

உடுமலை கார்த்திகை விழா மன்றம் சார்பில் பிரசன்ன விநாயகர் கோயிலில் 798 வது நிகழ்ச்சியாக பட்டிமன்றம் நடைபெற்றது. மன்றத்தின் செயலாளர் அங்கு பாலசுப்பிரமணியன் வரவேற்றார். அருண் சங்கர் தலைமை வகித்தார். மன அழுத்தத்திற்கு அருமருந்து சிரிப்பா, சிந்தனையா என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. கவி சு மாரிமுத்து நடுவராக இருந்தார். சிரிப்பே என்ற அணியில் கோவை முனைவர் உமாமகேஸ்வரி மற்றும் சிந்தனையே என்ற அணியில் கோவை முனைவர் கவிதா வாதிட்டனர். சிந்தனையே மன அழுத்தத்திற்கு அருமருந்து என நடுவர் தீர்ப்பு வழங்கினார். மன்றத்தின் துணை செயலாளர் கிருஷ்ணகுமார் நன்றி கூறினார். ஏற்பாடுகளை மன்றத்தின் நிர்வாகிகள் ரவீந்திரன் கெங்குசாமி, சுந்தரம் செய்தனர். திரளானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மே 09, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ