உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / மூச்சுத்திணறல் காரணமாக என விசாரணை | Three killed in velliangiri hill climp

மூச்சுத்திணறல் காரணமாக என விசாரணை | Three killed in velliangiri hill climp

கோவையில் தென்கைலாயம் என அழைக்கப்படும் வெள்ளியங்கிரி மலைக் கோயில் பிரசித்தி பெற்றது. ஏழு மலைகளை தாண்டி சுயம்பு வடிவில் இருக்கும் சிவலிங்கத்தை தரிசிக்க லட்சக் கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். கடந்த பிப்ரவரி முதல் மே மாதம் வரை பக்தர்கள் மலை ஏற வனத்துறை அனுமதி வழங்கியது. அதைத் தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் மலை ஏற்றம் சென்ற வண்ணம் உள்ளனர். வெள்ளியங்கிரி மலை ஏறிய ஐதராபாத்தை சேர்ந்த சுப்பாராவ் நான்காவது மலையில் ஏறி கொண்டு இருந்த நிலையில் திடீரென உடல்நலம் பாதிக்கபட்டு உயிரிழந்தார். அதேபோல் சேலத்தை சேர்ந்த தியாகராஜன் என்பவரும் உடல்நிலை பாதிக்கபட்டு முதலாவது மலைப் பாதையில் உயிரிழந்தார். வனத்துறையினர் சுமை தூக்கும் தொழிலாளர்கள் உதவியுடன் உடல்களை மீட்டு மலை அடிவாரத்திற்கு எடுத்து வந்துனர். உடல்கள் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பிடலுக்கு அனுப்பி வைத்தனர். இன்று அதிகாலை 4 மணி அளவில் தேனி மாவட்டத்தை சேர்ந்த பாண்டியன் இரண்டாவது மலை அருகே வழுக்குப் பாறை பகுதியில் உடல் நலம் பாதிக்கபட்டிருப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. சுமை தூக்கும் தொழிலாளர்களுடன் அங்கு சென்ற போது பாண்டியன் உயிரிழந்து கிடந்தார். அவரது உடலை மீட்டு அடிவாரம் கொண்டு வந்தனர். ஆலாந்துறை போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பிடலுக்கு அனுப்பி வைத்தனர். வெள்ளியங்கிரி மலையேற்றத்தின் போது அடுத்தடுத்து மூன்று பக்தர்கள் உயிரிழந்த சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மலையேற்றப் பாதையில் முதலுதவி சிகிச்சை அளிக்க மருத்துவக்குழுவை அமைக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தினர். குறிப்பு: பக்தர்கள் மூவர் பலியான போட்டோக்கள் உள்ளன. வெள்ளியங்கிரி ஃபைல் போட்டோ அல்லது வீடியோ பயன்படுத்தலாம்

மார் 25, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை