வன விலங்குகள் ஊருக்குள் புகாமல் தடுக்கும் ஏஐ தொழில்நுட்பம்
வன விலங்குகள் ஊருக்குள் புகாமல் தடுக்கும் ஏஐ தொழில்நுட்பம் | Wild animals do not enter the city | AI Technology | TN கோவை மாவட்டம் காரமடை ஊராட்சி ஒன்றியம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது கெம்மாரம்பாளையம் ஊராட்சி . வன விலங்குகள் நடமாட்டம் மிகுந்த இந்த ஊராட்சியில் யானைகள் அடிக்கடி ஊருக்குள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்தி வந்தன. இதற்கு ஒரு முடிவு கட்டும் பொருட்டு கெம்மாரம்பாளையம் ஊராட்சி நிர்வாகம் சோதனை அடைப்படையில் வனவிலங்குகளை விரட்ட நவீன தொழில் நுட்பமான ஏ.ஐ (Artificial Intelligence) எனப்படும் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தியது. இதன் ஒரு பகுதியாக இரும்பு கம்பத்தில் கண்காணிப்பு கேமராவும், ஒலிபெருக்கியும் பொருத்தப்பட்டது. கேமரா கம்பத்தில் இருந்து 50 மீட்டர் சுற்றளவில் எந்த வனவிலங்குகள் நடமாட்டம் இருந்தாலும் கேமராவில் பதிவாகும். கேமரா பதிவு நேரடியாக மானிட்டருக்கு செல்லும். அங்கிருந்து ஒலிபெருக்கியில் மனிதர்கள் விலங்குகளை விரட்டுவதை போன்று சத்தம் உட்பட ஏழு வகையான சத்தங்கள் தொடர்ச்சியாக ஒலிபரப்பாகும். அதனால் அந்த சத்தத்தை கேட்டு வனவிலங்குகள் சிறிது நேரத்தில் விவசாய நிலங்களுக்கு வராமல் வனப்பகுதிக்குள் மீண்டும் சென்று விடும். இதனால் விளை நிலங்கள் தப்பின.